திடீர் என விமானம் விபத்துக்குள்ளாகியதால் 3 பேர் பலி!
Friday, March 9th, 2018
அமெரிக்க விமான நிலையத்தில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், லாரெடோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பைப்பர்-31 என்ற விமானம் புறப்பட்டு உயரப் பறந்த சிறிது நேரத்தில் இயந்திரத்தில் கோளாறுஏற்பட்டதை விமானி கண்டுபிடித்து உடனடியாக லாரெடோ விமான நிலையத்திற்கே விமானத்தை திருப்பினார்.
ஆனால் ஓடுபாதையில் தரையிறக்க முயற்சித்தபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்ததால், புல்வெளியில் விழுந்து வெடித்து தீப்பிடித்தது. உடனடியாக மீட்புக்குழுவினர் விரைந்துசென்று விமானத்தில் பற்றிய தீயை அணைத்தனர்.
இருப்பினும் இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related posts:
காவல் துறை மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ள நாடுகள்!
மெக்சிகோ துப்பாக்கிச் சூட்டில் பொலிசார் 14 பேர் உயிரிழப்பு!
புதிய திட்டம் எதுவும் உருவாக்கப்படவில்லை - கலைக்கப்பட்டது அமெரிக்காவின் கொரோனா தடுப்பு செயலணி!
|
|
|


