தாய்வானில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நில அதிர்வுகள் பதிவு!

தாய்வானின் கிழக்கு மாகாணமான ஹுவாலியனில் இன்று (27) அதிகாலை சக்திவாய்ந்த நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
அதனடிப்படையில் 6.1 மெக்னிடியூட் அளவில், 2 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. எனினும் சேதம் குறித்த உடனடி அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இன்று அதிகாலையில் ஒன்றரை மணி நேரத்திற்குள் ஏற்பட்ட 2 நில அதிர்வுகளால் தலைநகர் தைபேயில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. முதல் நிலநடுக்கம் 24.9 கிலோ மீற்றர் ஆழத்தில் ஹுவாலியன் கடற்கரையைத் தாக்கியுள்ளது.
அதே சமயம் 5.8 மெக்னிடியூட் அளவில் இரண்டாவது நில அதிர்வு 18.9 கிலோ மீற்றர் ஆழத்தில் பதிவானதாக தாய்வானின் வானிலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.
தாய்வானில் இம்மாத ஆரம்பத்தில் 7.2 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதில் இருந்து இதுவரை 1,000க்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
000
Related posts:
|
|