தாய்லாந்து இரவு விடுதியில் திடீரென பற்றியது தீ – 14பேர் கருகி பலி!

Saturday, August 6th, 2022

தாய்லாந்தில் இரவு விடுதியில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் காயமடைந்துள்ளனர்.

பாங்கொக்கிலிருந்து தெற்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோன்புரி மாகாணத்தின் சத்தாஹிப் மாவட்டத்தில் உள்ள மவுண்டன் பி நைட்ஸ்பொட் என்ற இடத்தில் உள்ள இரவு விடுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

பெரும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், பீதியடைந்த மக்கள் விடுதியைவிட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேறிய காட்சி வெளியானது.

இந்நிலையில், 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இறந்தவர்களில் நான்கு பெண்கள் மற்றும ஒன்பது ஆண்கள் எனவும், இவர்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

000

Related posts: