தவறான தகவலால்தான் யெமனில் அஞ்சலி கூட்டத்தில் குண்டு வீசப்பட்டது – விசாரணை குழு தகவல்!
Sunday, October 16th, 2016
யெமனில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில், சவுதி தலைமையிலான கூட்டுப்படையை சேர்ந்த விமானம் தவறான தகவல் அடிப்படையில் தாக்குதல் நடத்தியுள்ளதாக குண்டுவீச்சு தொடர்பான விசாரணை ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று, யெமன் தலைநகர் சனாவில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், குறைந்தது 140 பேர் கொல்லப்பட்டார்கள் மற்றும் 500க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பான விசாரணையை நடந்திய சவுதி தலைமையிலான குழு, யெமன் இராணுவத்தால் தவறான தகவல் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சவுதி தலைமையிலான கூட்டணியிடமிருந்து இறுதி ஒப்புதல் பெறப்படாமலே நடத்தப்பட்டுள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.

Related posts:
ரஷ்யாவின் தடை தொடர்பிலான விஷேட கலந்துரையாடல்!
ரஷ்ய நாட்டவர்களை மாலைதீவுக்கு பயணிக்க வேண்டாம் என இலங்கையின் ரஷ்ய தூதரகம் அறிவிப்பு!
பத்திரிகையாளர் கசோக்கியின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி வீட்டு வளாகத்தில் கண்டுபிடிப்பு ?
|
|
|


