தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுகிறேன் : முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்!
Monday, February 6th, 2017
தமிழக முதல்வர் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்து ஆளுநர் வித்யாசாகர் ராவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அனுப்பப்பட்டுள்ள அந்த ராஜினாமா கடிதத்தில், தான் தனிப்பட்ட காரணங்களுக்காகவே தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது தலைமையிலான அமைச்சரவையை கலைக்கவும் கோரியுள்ள ஓ.பன்னீர்செல்வம், தனது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு தன்னை விடுவிக்க வேண்டும் எனவும் அதில் அவர் கோரியுள்ளார்.
முதல்வர் பன்னீர்செல்வத்தின் இந்தக் கடிதம், முன்னதாக இன்று மதியம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடந்த அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், கட்சிப் பொதுசெயலர், சசிகலாவை சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்து எடுக்கப்பட்ட முடிவை அடுத்து வருகிறது.

Related posts:
|
|
|


