ட்ரம்பின் பேச்சை மீறிய சீனா – 500 யுத்த கப்பல்களுடன் போர் பயிற்சி!

Friday, February 10th, 2017

அமெரிக்காவுடனான போருக்கு சீனா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக 500 க்கும் மேற்பட்ட யுத்தக் கப்பல்களுடன் சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 20ஆம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில், சீனாவுடன் போர் தொடுக்க நேரிடும் என ட்ரம்ப் கூறியுள்ளதுடன், சீனா மீது போர் தொடுப்பதில் ட்ரம்ப் மிகத்தீவிரமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சீனா அமெரிக்காவுடன் போரிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதயைடுத்து, தென் சீனக் கடலில், சீனக் கடல்படையினர் 500க்கும் மேற்பட்ட யுத்தக்கப்பல்களுடன் பாரிய போர் ஒத்திகைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் இந்த நடவடிக்கை அண்டைய நாடுகளை கடுமையாக பாதிக்கும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். எனினும், ட்ரம்பின் இந்த கருத்தை புறக்கணிக்கும் வகையில் சீனா போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சீனாவில் பொருளாதாரம் பலமான நிலையில், இருக்கின்றது. அதன் காரணமாக நிதி விவகாரத்தில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்பதால் ஒரு திறன் மிக்க ஆயுதப்படையை தயார் செய்வதில் சீனா உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களில் மட்டும் புது வகையான இராணுவப்படைகளை சீனா தயாராக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், எதிர்வரும் 2050 ஆண்டிற்குள் பசிபிக் பகுதிகள் முழுவதையும் சீனா தன் காட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக முழுநடவடிக்கைகளை எடுத்து வருவகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதேவேளை, சீனாவின் இந்த நடவடிக்கையின் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு ஒரு விதம் அச்சம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: