டொனால்ட் டிரம்பிற்கு சிக்கல்!
Wednesday, October 25th, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அவரது கட்சியான குடியரசு கட்சியிலேயே எதிர்ப்புகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் செனட் சபை உறுப்பினர் பொப் கோர்கெர் டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகள் தொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
குடிரசு கட்சியின் அரிசோனா மாநில செனட் உறுப்பினர் ஜெஃப் ஃப்ளேக்கும் டொனால்ட் ட்ரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அரசாங்கத்தின் உயர்மட்ட தலைமையின் நடவடிக்கைகள் அபாயகரமானது என்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் தாம் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னர் ஜெஃப் ஃப்ளேக்கை ‘விசம்’ என்று டொனால்ட் ட்ரம்ப் கூறி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆட்சிக்கவிழ்ப்பு தொடர்பான விசாரணை: துருக்கியில் 40 படையினர் கைது!
துருக்கி - ஈரான் எல்லையில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவு!
பறந்து கொண்டிருந்த கிளிகள் திடீரென சாலையில் விழுந்து இறப்பு: பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியானது...
|
|
|


