ஜேர்மனி புகையிரத நிலையத்தில் கத்தி வெட்டு – ஒருவர் பலி

ஜேர்மனின் மியூனிக் நகரில் ஒரு நபர் கத்தியால் வெட்டியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளார்கள்.
குறித்த தாக்குதலுக்கு ஏதாவது இஸ்லாமியவாத தொடர்பு இருக்கின்றதா என்று போலிஸார் புலன்விசாரணை செய்கிறார்கள்.
இன்று காலை 5 மணியளவில் கிரஃபிங் ரயில் நிலையத்தில் வைத்து 4 பயணிகளை அந்த 27 வயதான நபர் தாக்கியுள்ளார், காயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது.
தாக்குதலாளியை போலிஸார் மடக்கிப் பிடித்ததாக தெரியவருகின்றது. அவர் அல்லாஹ் அக்பர் என்று கோஷமிட்டதாக சம்பவ இடத்தில் இருந்த சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால், தாக்குதலாளியின் நோக்கம் தெரியவில்லை.
இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் இருக்கலாம் என்ற சந்தேகத்தை தாம் புறந்தள்ளவில்லை என்று போலிஸ் தரப்பு பேச்சாளர் கூறியுள்ளார்.
Related posts:
அப்போலோவின் கணினி இரகசியங்கள் களவு- வெளிவருமா ஜெயலலிதாவின் மருத்துவ உண்மைகள்?
போயிங் 737 - 800 விமானம் விபத்து - 180 பேர் பலி!
சோதனை வெற்றி: கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக இத்தாலி அறிவிப்பு!
|
|