ஜீ 7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலியை பயணம்!

Friday, June 14th, 2024

ஜீ 7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலியை சென்றடைந்துள்ளார்.

இத்தாலி பிரதமரின் அழைப்பிற்கு அமைய அவர் அங்கு சென்றுள்ள நிலையில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

நேற்று (13) ஆரம்பமான ஜீ 7 உச்சி மாநாடு நாளை (15) வரை இத்தாலியில் இடம்பெறவுள்ளது.

ஜீ 7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளார்.

இத்தாலி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் பிரதமர்களையும் அவர் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடுவார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: