ஜிம்பாப்வேயில் ஒக்டோபரில் அமெரிக்க டாலருக்கு இணையான பாண்ட் நோட்டுகள் அறிமுகம்!
Friday, September 16th, 2016
ஜிம்பாப்வேயில் வரும் ஒக்டோபர் மாதம், அமெரிக்க டாலருக்கு இணையான நாணயத்தாள் அறிமுகப்படுத்தப்படும் என்று ஜிம்பாப்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜிம்பாப்வேயில் டாலர் பணத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கட்டற்ற பணவீக்கத்தை முடிவுக்கு கொண்டுவர பிற வெளிநாட்டு பணத்துடன் டாலரும் 2009 முதல் பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஆய்வாளர்கள், பத்திரங்கள் அதன் மதிப்பை கொண்டதாக இல்லாமல் இருக்கும், இந்த மாற்றம் மேலும் பணவீக்கத்தை அதிகரிக்கும் என கவலை தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஏற்கனவே அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் சம்பள பணத்தைக் கொடுக்க போராடிவருகிறது.

Related posts:
தேசியவாத உணர்வினை புதுப்பிக்கப் போவதாக டிரம்ப் சூளுரை!
ஜிம்பாப்வேயில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்!
எண்ணெய்க் கசிவு - அவசரகால நிலையை அறிவித்தது குவைட் எண்ணெய் நிறுவனம்!
|
|
|


