சோமாலியாவில் குண்டுவெடிப்பு: 10 அதிகமானோர் பலி!
Sunday, August 21st, 2016
சோமாலிய பகுதியான புண்ட்லாந்தில் உள்ளூர் அரசாங்கத்தின் தலைமையகத்தில் நடந்த தற்கொலைக் குண்டு தாக்குதலில், பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
கல்கயோ நகரத்தில் உள்ள அலுவகத்திற்கு வெளியே இரண்டு கார்களில் வைக்கப்பட்ட குண்டுகள் அடுத்தடுத்து விரைவாக வெடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச்சுடும் சத்தமும் கேட்கப்பட்டது.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில், பாதுகாப்பு படைகள் மற்றும் பொது மக்கள் ஆகிய இருதரப்பைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என செய்திகள் தெரிவிக்கின்றன.இஸ்லாமியவாத குழவான அல் ஷபாப் தாங்கள்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளது. சோமாலியாவின் பெரும்பாலான நகரப் பகுதிகளிலிருந்து அந்த அமைப்பு விரட்டியடிக்கப்பட்டு விட்டது இருப்பினும் அரசுக்கு எதிராகவும் அரசை ஆதரிக்கும் ஆப்கான் ராணுவ படைகளை எதிர்த்தும் பொது மக்களிடம் பிரசாரம் செய்து வருகின்றது
Related posts:
|
|
|


