சீன இறக்குமதி பொருட்களுக்கான 25% கூடுதல் வரி அமுலில்!

Friday, July 6th, 2018

34 பில்லியன் டொலர் பெறுமதியான சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்காவின் 25 சதவீத கூடுதல் விதிப்பின் முதல் சுற்று இன்று(06) முதல் அமுலாகிறது.
இதேவேளை, அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதித்து நிலைமையை சீனா சரி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கமைய விமான டயர் மற்றும் வணிக ரீதியிலான பாத்திரங்கழுவும் எந்திரங்கள் உள்பட அமெரிக்கா இறக்குமதி செய்கின்ற 34 பில்லியன் மதிப்பிலான குறிப்பிட்ட சீனப் பொருட்களுக்கு கூடுதலான வரி செலுத்த வேண்டியுள்ளது.
சீனாவும் விவசாய உற்பத்தி பொருட்கள் மற்றும் கார்கள் போன்ற அமெரிக்க உற்பத்தி பொருட்களின் மீது 25% கூடுதல் வரி வசூலிக்க தொடங்கும். இவ்வாறு கூடுதல் வரி விதிப்பை திட்டமிடப்படுவதற்கு முன்னால், தனது நாடு உள்பட முழு உலக நாடுகள் மீதும் அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது என சீனா தெரிவித்துள்ளது.
அண்மையில் தசாப்தங்களில் உலக அளவில் பொருட்களின் பரிமாற்றத்தை உருவாக்கியுள்ள சுதந்திர வர்த்தக கொள்கைகளை புறக்கணிக்கின்ற ஜனாதிபதி டிரம்பின் வர்த்தகப் பாதுகாப்புவாத கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை வந்துள்ளது.
இன்னும் 16 பில்லியன் இறக்குமதி பொருட்களுக்கான கூடுதல் வரி விதிப்பை ஆலோசித்து, பின்னர் அமுலாக்கப் போவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், மெக்ஸிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற சலவை இயந்திரங்கள், சூரிய மின் தகடுகள், எஃகு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு கூடுதல் வரியை ஏற்கனவே டிரம்ப் விதித்துள்ளார்.
குறித்த இந்த வர்த்தக சர்ச்சை உலக பங்குச் சந்தைகளில் கொந்தளிப்பை உருவாக்கி, உலக வர்த்தகம் மற்றும் வளர்ச்சியை பாதிக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தன்னுடைய பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக இதற்கு எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக சீனா தெரிவித்துள்ளது.
வட கொரியாவோடு அணு ஒப்பந்தம் மேற்கொண்டு, அதிபர் டிரம்ப் நிர்வாக திறனை குறைப்பதை சீனா கடைசி முயற்சியாக மேற்கொள்ளலாம் என்று பீட்டர்சன் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts: