சீனாவுடன் இணைய விரும்பும் ஜப்பான்!

வட கொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் சீனாவுடன் இணைந்து செயற்பட ஆர்வமாக உள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
சீன அரசவை உறுப்பினர் யாங் ஜெய்ச்சிக்கும், ஜப்பான் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு டோக்கியோவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. அதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும், வட கொரியாவின் செயற்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பிற நாடுகளும் தமது ஆக்கபூர்வமான பங்களிப்பை வெளிப்படுத்தும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வட கொரியா சமீபத்தில் தொடர்ந்து பல ஏவுகணைகளை சோதனை செய்து வந்தது. அந்தவகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறுகிய தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை வட கொரியா சோதனையிட்டிருந்த நிலையில், அது ஜப்பான் கடற்பரப்பில் தரையிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|