சீனாவில் நிலநடுக்கம்!

Monday, May 28th, 2018

வடகிழக்கு சீனாவின் ஜீலின் மாகாணத்திலுள்ள சொங்கியுவன் என்னும் இடத்தில் 5.7 magnitude அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால்  அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் 45.27 பாகை வடக்கிலும், 124.71 பாகை கிழக்கிலும் மையம் கொண்டிருந்ததாகவும் 13 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் தொலைத்தொடர்பு பாதிக்கப்பட்ட போதிலும் மின்சாரவசதிகள் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் வசிப்பவர்கள், நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்து உடனடியாக வீதிகளுக்கு வந்துவிட்டதாகவும் அங்கு அவசரகால வசதிகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

Related posts: