சீனாவில் நிலச்சரிவு – 10 பேர் உயிரிழப்பு!

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நிலச்சரிவில் லின்பென் சிட்டி பகுதியில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கட்டிட இடிபாடுகளில் இருந்து 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதுடன், மேலும், 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
பங்களாதேஷில் பொலிஸார் தாக்குதல்: 9 இஸ்லாமிய கடும்வாபோக்குவாதிகள் பலி!
இத்தாலியில் கடும் பனிச்சரிவு: 100 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!
அவுஸ்திரேலியாவில் பாரிய வெள்ளப்பெருக்கு!
|
|