சிறுமிகளை கொண்டு நடத்திய குண்டு தாக்குதல் – நைஜீரியாவில் ஒருவர் பலி!
Monday, December 12th, 2016
நைஜீரியாவில், போர்னோ மாநிலத்தின் சந்தையில், சிறுமிகள் இருவர், இரு குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதாகவும் அதில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மைடுகுரியில் உள்ள உள்ளூர் போராளி ஒருவர், குண்டு வெடிப்பை நிகழ்த்திய சிறுமிகளுக்கு 7 அல்லது 8 வயது இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அவர்கள் ரிக்ஷாவை விட்டு இறங்குவதை அவர் கண்டதாகவும், அவர்களில் ஒருவரிடம் பேச முற்பட்டதாகவும் ஆனால் அவர்கள் சந்தையில் இருக்கும் கடைகள் அருகே சென்று வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை; ஆனால் போகோ ஹரம் அமைப்பு பெண்களையும் குழந்தைகளையும், வெடிகுண்டு தாக்குதலுக்கு அதிகமாக பயன்படுத்தி வருகிறது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts:
சீனாவின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு 10 ஆண்டுகள் சிறை!
'ஸ்பேஸ் எக்ஸ் பெலகன் 9' ஓடம் நிலவை நோக்கி பயணம்!
ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா!
|
|
|


