சிரியாவில் நடந்த விமான தாக்குதலில் 25 பேர் பலி!

Sunday, September 11th, 2016

சிரியாவில் போராளிகள் வசமிருக்கும் இட்லிப் நகரில், காய்கறி சந்தை மீது நடத்தப்பட்ட விமான தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

பலியானவர்களில் குழந்தைகளும் இருந்ததாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போவில் போராளிகளுக்கும், சிரியா ராணுவத்தினருக்கும் இடையே தீவிர சண்டை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

160801121006_idlib_syria_640x360__nocredit

Related posts: