சிரியாவில் குண்டு வீச்சு: 45 ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிரிழப்பு
Sunday, May 15th, 2016
சிரியா நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வந்தது. இதில் 2½ லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 10 லட்சம் பேர் காயம் அடைந்தும், 1 கோடியே 10 லட்சம் பேர் அகதிகளாக பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்தும் உள்ளனர்.
அங்கு பிப்ரவரி மாதம் இறுதியில் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள போதிலும், அலெப்போ நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மட்டும் மோதல்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் அலெப்போ நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் இலக்குகளை குறி வைத்து துருக்கியும், அமெரிக்க கூட்டுப்படைகளும் குண்டுவீச்சு நடத்தின. இதில் சிக்கி 45 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியாகினர்.
இந்த தகவலை சிரியா அரசின் அனடோலு செய்தி முகமை தெரிவித்துள்ளது.
Related posts:
கிறிஸ்தவ மதகுருக்கள் இருவர் கடத்தி கொலை!
புகையிரதத்துடன் ட்ரக் ரக மோதி விபத்து - 4 பேர் பலி!
கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்துக்கள் வாங்க தடை – கஉடிய அரசு அறிவிப்பு!
|
|
|


