சிரியாவிற்குள் ஊடுருவிய துருக்கி டாங்கிகள்!

சிரியாவிற்குள் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு துருக்கி டாங்கிகள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வாரத்திற்கு முன்பு முதல் ஆக்கிரமிப்பு நடைபெற்ற பகுதிக்கு மேற்கு பக்கமாக இந்த டாங்கிகள் சென்றுள்ளன.
இந்த டாங்கிகள் கில்லிஸ் மாகாணம் வழியாக கடந்து வந்துள்ளன.எல்லைத் தாண்டிய ஷெல் குண்டுவீச்சால் இந்த மாகாணம் பாதிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக பல மாதங்கள் போராடிய துருக்கி ஆதரவு பெற்ற போராளிகளின் கட்டுப்பாட்டில் தற்போது அல்-ராய் நகரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஒட்டி, ஐ.எஸ். நிலைகள் மீது ஷெல் தாக்குதல்களும் நடத்தப்பட்டிருப்பதாக துருக்கி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று: பெய்ஜிங் முழுவதும் ஊரடங்கு அமுல்!
பூமியின் சுழற்சி வேகம் அதிகரிப்பு - அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள விஞ்ஞானிகள்!
இஸ்ரேலின் அகிரா ஏர்லைன்ஸ் ஒக்டோபர் 31 முதல் வாரத்துக்கு இரண்டு முறை இலங்கைக்கு நேரடி விமான சேவையை மே...
|
|