சிம்பாபேயின் ஜனாதிபதியாக எமர்சன்!
Saturday, November 18th, 2017
சிம்பாபேயின் புதிய ஜனாதிபதியாக எமர்சன் நங்காக்வா நியமிக்கப்படவிருப்பதாக சர்வதேச தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் உப ஜனாதிபதியாக இருந்த போது ஜனாதிபதி ரொபட் முகாபே அவரை பதவி நீக்கினார். இதனையடுத்து ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நாட்டின் கட்டுப்பாட்டை இராணுவம் கையகப்படுத்தியது.
அத்துடன் ரொபட் முகாபே தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் 75 வயதான நங்காக்வா, தம்மை ஜனாதிபதியாக அறிவித்து கொள்ளவிருப்பதான தகவல்களை மேற்கோள்காட்டி சீ.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.
நங்காக்வாவை கடந்த 2000 ஆம் ஆண்டு அந்த நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கும் முயற்சிகள் இடம்பெற்றிருந்தாக அண்மையில் விக்கலீக்ஸ் ஊடாக வெளியான அமெரிக்க ரகசிய தொலைதொடர்பு ஆவணங்கள் மூலம் தகவல் கசிந்திருந்தமை குறிப்பிடதக்கது.
Related posts:
ரஜினியைக் கடத்துவதே வீரப்பனின் திட்டம்? - ராம் கோபால் வர்மா
மத்திய கிழக்கில் முறுகல்: துருக்கிக்கான இஸ்ரேலிய தூதரை வெளியேறுமாறு உத்தரவு!
கொலம்பிய ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டரை இலக்குவைத்து தாக்குதல்!
|
|
|


