சவுதி இளவரசர் நீக்கம்!
Thursday, June 22nd, 2017
சவுதி அரேபியாவின் புதிய இளவரசராக முகமது பின் சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.சவுதி அரேபியாவின் இளவரசராக இருந்த முகமது பின் நயிப் பின் அப்துல்யாஸிஸ்(57) நீக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு பதிலாக புதிய இளவரசர் சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய இளவரசரைத் தேர்வு செய்வது தொடர்பாக அங்குள்ள அல் சபா மாளிகையில் சவுதி அரசரின் வரிசு குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் உள்ள 43-உறுப்பினர்களில் 31-பேர் சல்மானுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.இதனால் சவுதியின் புதிய இளவரசராக சல்மான் நியமிக்கப்பட்டார். மேலும் சல்மான் தான் பொறுப்பு வகித்து வந்த பாதுகாப்பு துறை மந்திரி பதவியையும் தக்க வைத்துள்ளார். சல்மான் துணை இளவரசாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியது; 50 பேர் பலி!
பேச்சுக்களில் திருப்தி: அணு ஆயுதத்தை ஒழிக்க இருவரும் இணைந்து செயல்படுவோம் – டிரம்ப்!
பெண்கள் தேசத்தின் தாய்மைக்கான பரிசு - ரஷ்ய ஜனாதிபதி பிளடிமிர் புட்டின் வாழ்த்து!
|
|
|


