சவுதி அரேபியாவில் புதிய சட்டம்! வெளிநாட்டவர்களுக்கு சிக்கல்!

Saturday, April 22nd, 2017

சவுதி அரேபியாவில் உள்ள பெரிய வர்த்தக நிலையங்களில் சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்தவர்களை மாத்திரம் வேலையில் அமர்த்த வேண்டும் என்று சவுதி அரேபிய தொழிலாளர் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சவுதி அரேபியாவில் 2030ஆம் ஆண்டுக்கான பொருளாதார சீர்திருத்தத் திட்டம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.அதில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி சவூதி அரேபியாவில் சிறு மற்றும் பாரிய தொழில் செய்யும் இடங்களில் 15 இலட்சம் பேர் வரை வேலை செய்து வருகின்றனர்.

அவர்களில் 3 இலட்சம் பேர் மட்டுமே சவுதி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சவுதியில் சிறு தொழில்கள் செய்யும் துறைகளில் 5இல் ஒருவர் மட்டுமே அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.இதன் காரணமாகவே பாரிய வர்த்தக நிலையங்களில் சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்தவர்களை மாத்திரம் வேலையில் அமர்த்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2020ஆம் ஆண்டுக்குள் இந்த துறைகளில் சவுதி நாட்டைச் சேர்ந்த 10 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.தற்போது அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் அரசு குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சவுதி அரசின் இந்த நடவடிக்கையால் ஏராளமான இலங்கையர்கள் உட்பட அங்கு தொழில் புரியும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்புகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:

ரஷ்யா - உக்ரைன் யுத்தம் - நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் அவசரமாக கூடுகிறது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்!
பல இலட்சம் ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்களை வைத்து வாதாட நளினிக்கு எங்கிருந்த பணம் வந்தது? - 31 ஆண்டுகள...
இஸ்ரேல் – ஹமாஸ் போதல் உக்கிரம் - ஹமாஸ் பங்கரவாத அமைப்பு அடியோடு துடைத்தெறியப்படும் – இஸ்ரேல் சூழுர...