சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்!

சர்வதேச ரீதியில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தைக் கடந்துள்ளதாக சுகாதார தரப்பினது புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
அத்துடன் கொரோனா பரவல் காரணமாக சர்வதேச ரீதியில் அமெரிக்கா அதிக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. அதனடிப்படையில் அமெரிக்காவில் 3 இலட்சத்து 97 ஆயிரத்து 385 பேர் மரணித்துள்ளார்.
அதனை அடுத்து பிரேஸிலில் 2 இலட்சத்து 7 ஆயிரம் பேரும், இந்தியாவில் ஒரு இலட்சத்து 51 ஆயிரம் பேரும், மெக்ஸிகோவில் ஒரு இலட்சத்து 36 ஆயிரம் பேரும் மரணித்துள்ளனர்.
குறித்த நான்கு நாடுகளும் சர்வதேச ரீதியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகளவான கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ள நாடுகளாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மெகி புயலுக்கு சீனாவில் 16 பேர் பலி!
அமெரிக்க வான் பரப்பில் பறந்தது உளவு பலூன் அல்ல - ஆகாயக் கப்பல் - சீனா விளக்கம்!
'இதயத்தை நொறுக்குகின்றது' - ஒடிசா தொடருந்து விபத்துக்கு கனடா பிரதமர் இரங்கல்!
|
|