சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசாரணை வேண்டும் – திமுக செயல் தலைவர் ஸ்டாலின்!

இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை நடத்த வேண்டும் என்று, ஐக்கிய நாடுகள் சபைக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையக துணை உயர்ஸ்தானிகருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்திலேயே இதனைக் கூறியுள்ளார். தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ அரசியல் தீர்வு நிச்சயம் தேவை என்றும் அரசியல் தீர்வை ஏற்படுத்த பொது வாக்கெடுப்பால் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையக கூட்டத்தில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
Related posts:
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுகின்றது பிரித்தானியா!
இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் - வடகொரியாவை எச்சரிக்கும் அமெரிக்கா!
கொரோனா: இத்தாலியிலும் அதிகளவான உயிரிழப்புக்கள்!
|
|