சர்ச்சைக்குரிய முறையில் கோசோவோவுக்கு ரயில் சேவையை ஆரம்பித்த செர்பியா!

Sunday, January 15th, 2017

செர்பியா இன மக்கள் வாழும் கொசோவோவின் வடக்கு பகுதிக்கு செர்பிய தேசிய கொடியின் நிறத்தில் வண்ணம் அடிக்கப்பட்ட ஒரு ரயிலை பெல்கிரேடில் இருந்து ரயில் சேவை ஒன்றை செர்பியா ஆரம்பித்தள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஆத்திரமூட்டுவதாக அமைகிறது என்று கேசோவோ அதிகாரிகள் கண்டித்திருக்கின்றனர்.

இந்த ரயிலின் வெளிப்புறத்தில் “கேசோவோ செர்பியாவை சேர்ந்ததே” என்ற சுலோகம் 20 வேறுபட்ட மொழிகளில் வண்ணம் அடிக்கப்பட்டுள்ள நிலையில், ரயிலின் உட்புறத்தில் கோசோவோவிலுள்ள பிரபல மடாலயங்களை சேர்ந்த செர்பிய ஆர்த்தோடாக்ஸ் மதத் தலைவர்களின் உருவங்கள் வரையப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு செர்பியாவிடம் இருந்து சுதந்திரம் பெறுவதாக கோசோவோ தன்னிச்சையாக அறிவித்தது. இந்த பிரகடனம் ரஷ்யா ஆதரவு பெற்றிருக்கும் செர்பியாவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1998 முதல் 1999 வரையான காலத்தில் இந்த பிராந்தியத்தில் செர்பியர்களுக்கும், கோசோவோ அல்பேனியர்களுக்கும் இடையில் கசப்பான மோதல் நடைபெற்றது.

_93571996_gettyimages-631651964

Related posts: