சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ராணுவ பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ள சீனா!
Monday, July 4th, 2016
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் அடுத்த வாரத்தில் சீனா ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த கடல் பரப்பில் பெரும்பான்மை பகுதியை தன்னுடையதாக சீனா உரிமை கோருவதை எதிர்த்து பிலிப்பைன்ஸ் ஐக்கிய நாடுகள் சபை நடுவர் தீர்ப்பாயத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்னர் இந்த பயிற்சிகள் முடிந்துவிடும்.
சீனா தனக்கு சொந்தமான கடல் பகுதியாக அது கருதும் இடங்களில் கடற்ப்படை பயிற்சிகளை மேற்கொள்வது வழக்கமாகும். என்றாலும், இந்த ஒருவாரகால ராணுவ பயிற்சிகள் நடைபெறும் நேரத்தையும், இடத்தையும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து கேள்வி எழுப்புள்ளனர்.தைவானும், வியாட்நாமும் பாராசெல் தீவுகளை தங்கள் எல்லைக்குட்பட்டதாக கருதுகின்றன.
Related posts:
வியட்நாம் வீடு சுந்தரம் மரணம்!
பாகிஸ்தானில் புகையிரத விபத்து: 12 பேர் பலி!
ஜி 7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலிக்கு விஜயம்!
|
|
|


