சர்ச்சைக்குரிய சுவர் கட்டுமானப்பணிகள் ஆரம்பம்!

Wednesday, September 21st, 2016

அகதிகளின் வருகையை தடுக்கும் பொருட்டு பிரான்சின் வடக்கு பகுதியில் கொங்கிரீட் சுவர் எழுப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரான்சின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள Calais அகதிகள் முகாமில் இருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவாதாக குற்றச்சாட்டு எழுந்து வந்துள்ளது.இதனையடுத்து கடந்த 2003 ஆம் ஆண்டு பிரித்தானியாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி குறிப்பிட்ட முகாமில் இருந்து அகதிகள் எவரும் பிரித்தானியாவுக்குள் நுழையாதபடி இரு நாடுகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இதன் ஒருபகுதியாக பிரித்தானியா சார்பில் 2 மில்லியன் பவுண்ட் மதிப்பில் ஒரு மைல் நீளம் கொண்ட சுவர் ஒன்றை எழுப்ப இரு நாடுகளும் முடிவு செய்தன.

இதன் பொருட்டு சர்ச்சைக்குரிய இந்த சுவரின் கட்டுமான பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளது. பிரான்சின் இடசாரி மற்றும் வலதுசாரி கட்சிகளின் அரசியல்வாதிகள் பலர் இந்த திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையிலும், குறிப்பிட்ட சுவரை எழுப்புவதில் இரு நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன.13 அடி உயரம் கொண்ட இந்த சுவரானது வெட்கத்தின் சுவர் என எதிர்ப்பாளர்கள் அழைத்து வருகின்றனர். மட்டுமின்றி குறிப்பிட்ட சுவர் எழுப்பும் நடவடிக்கைக்கு எதிராக மக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் சமூக ஆர்வலர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக குறிப்பிட்ட சுவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை சமூக ஆர்வலர்களும் அரசியல் கட்சியினரும் முன்னெடுத்துள்ளனர். பிரித்தானிய மக்களின் வரிப்பணத்தில் கட்டப்படும் இந்த சுவரனது உண்மையில் எவ்வித பயனையும் தரப்போவது இல்லை என்றும், இது குறிப்பிட்ட சமூகவிரோதிகளுக்கு தங்களின் கட்டணத்தை அதிகரிக்கச்செய்ய வழிவகுக்கும் என்பது மட்டுமே சிறப்பு என்று அகதிகள் ஆதரவு குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டுமானப்பணிகள் அனைத்தும் முடிவுக்கு வரும் என உள்ளூர் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஜங்கிள் முகாம் எனப்படும் பிரான்சின் அகதிகள் முகாமில் சுமார் 10,000 அகதிகள் பிரித்தானியாவுக்குள் தங்களது புதுவாழ்க்கையை கனவு கண்டு வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: