சர்ச்சைக்குரிய சட்டமூலத்துக்கு நாடாளுமன்ற ஆதரவு – ஜோர்ஜியா ஆர்ப்பாட்டத்தில் மோதல்!

ஜோர்ஜியாவில் சர்ச்சைக்குரிய சட்டமூலத்துக்கு நாடாளுமன்ற ஆதரவு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது மோதல் ஏற்பட்டுள்ளது.
பத்திரிகை சுதந்திரத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளை ஒடுக்கும் வகையில் இந்தச் சட்டமூலம் உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஜோர்ஜியா நாடாளுமன்றத்துக்கு வெளியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் அதனை கலைப்பதற்கு காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியதுடன் கண்ணீர் புகை பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது 50க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், எதிர்க்கட்சி ஒன்றின் தலைவர் உட்பட 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பெல்ஜியம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் படங்கள் வெளியானது!
மியன்மாரில் புதைகுழியிலிருந்து 10 சடலங்கள் மீட்பு!
கோர விபத்து; வீதியில் உறங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கிப் பலி!
|
|