சட்டமா அதிபரை பதவி விலக்கிய அமெரிக்க ஜனாதிபதி!
Thursday, November 8th, 2018
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சட்டமா அதிபர் ஜெஃப் செஷன்ஸை பதவி நீக்கம் செய்துள்ளார். செஷன்ஸின் சேவைகளுக்கு நன்றி தெரிவிப்பதாக ட்ரம்ப் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்க்கு ரஷ்யா உதவி செய்ததாக பரவலாக குற்றம் சுமத்தப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளிலிருந்து சட்டமா அதிபர் விலகியதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி அவரை கடுமையாக விமர்சித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தீவிரவாத தாக்குதல்களினால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர் பலி!
பிலிப்பைன்ஸில் குண்டு வெடிப்பு - உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
பேருந்து விபத்து - 29 பேர் உயிரிழப்பு!
|
|
|


