சசிகலாவினால் தீபாவின் உயிருக்கு ஆபத்து- தீபாவின் கணவர் பொலிஸில் முறைப்பாடு!

தேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சசிகலா, தினகரன் மற்றும் தீபக் ஆகியோரே பொறுப்பு என தீபாவின் கணவர் மாதவன், பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார்.
போயஸ் கார்டனில் நடந்த சம்பவம் தொடர்பாக தீபாவின் கணவர் மாதவன் சென்னை பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்பாட்டினைச் செய்த பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
“மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்றிருந்த தீபா அங்கு அசாதாரணமான சூழல் நிலவுவதாக கூறி என்னை அழைத்ததன் பேரில் நான் அங்கு சென்றேன்.
அப்போது அங்கிருந்த தீபக் என்னை மிரட்டியதுடன் அங்கிருந்த அடையாளம் தெரியாத ரவுடிகள் என்னையும், தீபாவையும் தாக்கினர். அவர்களை மீண்டும் பார்த்தால் என்னால் அடையாளம் காட்ட முடியும்.
தீபாவுக்கும் எனக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எங்களது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சசிகலா, தினகரன் மற்றும் தீபக் ஆகியோரே பொறுப்பாகும்” என தீபாவின் கணவர் மாதவன் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|