கொரோனா தாக்கத்தால் 16.8 கோடி மாணவர்கள் பாடசாலை செல்லவில்லை – ஐ.நா. தகவல்!

Friday, March 5th, 2021

தற்போது உலகம் முழுவதையும் ஆட்கொண்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக 16.8 கோடி மாணவர்கள் ஓராண்டாக பாடசாலை செல்லவில்லை என ஐ.நா. தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பெரும்பாலான உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தின. அப்போது முதலே பாடசாலைகள் மூடப்பட்டன.

இவ்வாறு பாடசாலை செல்லாத மாணவர்களின் எண்ணிக்கையை ஐ.நா. அமைப்பான யுனிசெப் ஆய்வு செய்தது. இதில் 16.8 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் கடந்த சுமார் ஓராண்டாக பாடசாலை செல்லவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

இதைப்போல உலகம் முழுவதும் சுமார் 21.4 கோடி மாணவர்கள் 3 காலாண்டாக நேரடி வகுப்புகளில் பங்கேற்கவில்லை. மேலும் முழு மற்றும் பாதியளவு கல்வி பாடசலைகள் மூடப்பட்டதினால் 88.8 கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் முக்கியமாக 14 நாடுகளில் கடந்த ஆண்டு மார்ச் முதல் கடந்த மாதம் வரை பெரும்பாலும் பாடசாலைகள் மூடியே உள்ளன. இதனால் 9.8 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக யுனிசெப் அறிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் – பிரதமர் மஹிந்த தெ...
பொதுமக்களிற்கு சரியான தகவல்கள் சென்றடைவதை உறுதி செய்வதற்கு ஊடகங்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் –...
நல்ல முட்டையிடும் கோழியைக் கொன்று சாப்பிடும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை - இராஜாங்க அமைச்சர் திலும்...