கொரோனா தடுப்பூசி முதல் முறையாக மனிதர்களில் பரிசோதனை : 80 வீதமான பயனைத்தரும் என ஒக்ஸ்போட் பல்கலைக்கழக பேராசிரியர் சாரா கில்பர்ட் நம்பிக்கை!

Friday, April 24th, 2020

பிரித்தானியாவில் கொரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பூசி முதன்முறையாக நேற்று மனிதர்களில் பரீட்சிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் ஆய்வின் ஒரு கட்டமாகவே இந்த தடுப்பூசி பரீட்சிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய இரண்டு பேருக்கு நேற்றையதினம் குறித்த தடுப்பூசி ஏற்றப்பட்டது.

இதில் ஒருவார் மருத்தவ விஞ்ஞானியாவார்.  இந்த இவருவரும் தாமே முன்வந்து இந்த தடுப்பூசியை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பில் இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி 80 வீதமான பயனைத்தரும் என்று ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், தடுப்பூசி தயாரிப்புக்கு தலைமை தாங்கிய சாரா கில்பர்ட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது மனித குரங்குகளின் பலவீனமான குளிர் வைரஸ் அல்லது அடினோவைரஸ் பதிப்பில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே மனிதர்களில் இது வளர்ச்சி பெறமுடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடுப்பூசி எதிர்வரும் காலத்தில் சுமார் 5000 பேருக்கு பரீட்சிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கென்யாவில் கொரோனா வைரஸின் பரவல் குறைந்த விகிதத்தில் உள்ளமையால் அங்கு இதனை பரீட்சித்துப்பார்க்க யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தடுப்பூசி திட்டத்துக்காக 40 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தடுப்பூசியின் ஆய்வில் அமெரிக்கா இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Related posts: