கொன்சர்வேவ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்கவுள்ள பொரிஸ் ஜோன்சன்!

பொரிஸ் ஜோன்சன் பிரித்தானியா பிரதமர் பதவியை பொறுப்பேற்றதன் பின்னர் புதிய அரசாங்கத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபடவுள்ளார்.
பக்கிங்காம் மாளிகையில் பிரித்தானிய மகாராணியை சந்தித்ததன் பின்னர் இன்றைய தினம் கொன்சர்வேவ் கட்சியின் தலைவராக பொரிஸ் ஜோன்சன் கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து உள்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அமைச்சரவை பதவிகளுக்கான நியனங்களை அவர் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான உயர்மட்ட குழு நவீன பிரித்தானியாவை பிரதிபலிக்கும் என அவருக்கு நெருக்கமான தரப்பினரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமைச்சரவைப் பதவிகளில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஜேர்மனி வணிகவளாக படுகொலை: துப்பாக்கி விற்ற நபர் கைது!
சசிகலாவின் பேச்சு நகைச்சுவையானது- ஓ.பன்னீர் செல்வம் !
ஊரடங்கு தளர்த்தப்படுவது ஆபத்தானது – உலக நாடகளை எச்சரிக்கிறது உலக சுகாதார அமைப்பு!
|
|