காவிரி நீரால் கர்நாடகாவில் பெருக்கெடுத்தது வன்முறை : 65க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு தீவைப்பு!
Monday, September 12th, 2016
காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் உத்தரவுக்கு எதிராக கர்நாடகாவில் தமிழருக்கெதிராக வன்முறை. 65 க்கம் மேற்பட்ட பெரந்தகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவிரியில் தமிழகத்திற்கு தினமும் 15,000 கன அடி தண்ணீர் 10 நாட்களுக்கு திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை ஏற்க இன்று மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், கூடுதலாக 3 நாட்களுக்கு 12,000 கன அடி தண்ணீர் வழங்க உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கர்நாடகாவில் வன்முறை வெடித்துள்ளது. பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு – மைசூர் சாலையில் தமிழகத்தை சேர்ந்த கே.பி.என், எஸ்.ஆர்.எஸ் டிராவல்ஸ் பேருந்துகள் 65-க்கும் மேற்பட்டவை தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் தமிழர்களின் உடைமைகள் மீதான தாக்குதல்கள் முழுவதுமாக தடுத்து நிறுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்திருந்த நிலையில், பற்றி எரியும் வன்முறையை கட்டுப்படுத்தும் திறனற்றதாக கர்நாடக போலீசார் திகழ்வது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. கட்டுக்கடங்காமல் வன்முறை பற்றி எரிவதால் கர்நாடகத்தில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
கொளுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தும் கர்நாடக பதிவு எண் கொண்டவையாக இருந்த போதிலும், அவைகளின் உரிமையாளர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில் பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts:
|
|
|


