காபூல் குண்டுத் தாக்குதல்களுக்கு ISIS உரிமைகோரியது: பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு!
Friday, August 27th, 2021
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள ஹமிட் கர்ஸாய் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு பாரிய குண்டு தாக்குதல்களில் 73 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களில் பொதுமக்கள் 60 பேர் அடங்குவதாக காபுலில் உள்ள சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அத்துடன், அத்துடன், 140 பேர் காயமடைந்துள்ளனர். இந்தக் குண்டுத் தாக்குதல்களில் 13 அமெரிக்க துருப்பினரும் கொல்லப்பட்டுள்ளதாக பெண்டகன் உறுதிப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, காபூல் விமான நிலையத்தைவிட்டு வெளியேறுமாறு, மேற்குலக நாடுகள் தமது பிரஜைகளுக்கு நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தன.
இந்த நிலையில், குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து, காபூலில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ் அமைப்பு உரிமைகோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
|
|
|


