காபுலில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கோரம்: 60க்கு மேற்பட்டோர் பலி !
Monday, April 23rd, 2018
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாக்களிப்பு நிலையம் ஒன்றில் இந்த தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக முறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்காளர் பதிவு இந்த மாதம் ஆரம்பமாகியிருந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Related posts:
அமெரிக்க இராஜாங்கச் செயலர் பொம்பியோ இலங்கை வருகிறார்!
பிரதமர் பதவியில் போட்டியிடுவதற்கு தடை!
இந்தியாவின் சூரியனை நோக்கிய பயணம் ஆரம்பம் - விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்-1 விண்கலம்!
|
|
|


