காட்டுத்தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டுள்ள வாநூர்தி!

Saturday, November 24th, 2018

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் இல் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க முதன் முறையாக போயிங் 737 ரக வாநூர்தி பயன்படுத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பயணிகள் வாநூர்தியில் மாற்றங்கள் செய்யப்பட்டு 15 ஆயிரம் லீட்டர் நீரினை ஒரே நேரத்தில் விசிறி அடிக்கும் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பல தடவை நீரை ஏந்திய நிலையில் இந்த பணி தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தீயணைக்கும் படையை சேர்ந்த 63 அதிகாரிகளும் இந்த வாநூர்தியில் ஏற்றி அனுப்பப்பட்டதால் தீயணைக்கும் பணிகள் இலகுவாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரத்து 500 ஹெக்டயர் நிலம் அழிந்து போய் இருந்த போதிலும், காட்டுத்தீ மேலும் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கட்டடங்களுக்கான சேதங்களும் பாரிய அளவில் ஏற்படவில்லை என தீயணைக்கும் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Related posts: