கவுதமாலா எரிமலை வெடிப்பு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரை இழந்த பெண்மணி!
Thursday, June 14th, 2018
கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியதில் பெண் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 50 பேர் காணாமற் போயிருக்கின்றனர்.
கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியது. இதில் 110 பேர் உயிரிழந்தனர். 200 ற்கும் மேற்பட்டோர் காணாமற்போயிருந்தனர்.
இந்த நிலையில் எரிமலை சாம்பலில் சிக்கி யூஃபிமியா கார்சியா என்பவரின் உறவினர்கள் 50 பேர் காணாமற் போயுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.
50 வயதான கார்சியாவுடன் 9 பேர் பிறந்துள்ளனர். மூன்று தலைமுறை கண்ட கார்சியாவின் 75 வயது தாயும் இந்த எரிமலை வெடிப்பில் காணாமற் போயிருக்கிறார்.
பல நாள்களாகியும் என் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் என 50 பேரை காணவில்லை என கார்சியா கவலையுடன் கூறுகிறார்.
Related posts:
டொனால்ட் டிரம்பை கொலை செய்ய முயன்ற இளைஞன் அதிர்ச்சி வாக்குமூலம்!
நேபாளத்தின் ஆபத்தான பனி ஏரி வடியச்செய்யப்பட்டது!
பிரெக்சிற்: தொடர்பில் அவசரமான ஒப்பந்தத்துக்கு வேண்டுகோள்!
|
|
|


