கலிபோர்னிய விமான விபத்து; 5 பேர் பலி!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான்டா அன்னா நகரில் ஷாப்பிங் சென்டர் பகுதியில் இருந்து 2 என்ஜின்கள் பொருத்தப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று அவசரமுடன் தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளாரகியுள்ளது.
இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் தரை பகுதியில் இருந்தவர்கள் யாரும் காயமடைந்து உள்ளனரா? என்பது பற்றிய விவரங்கள் வெளிவரவில்லை.
இதனை அடுத்து உடனடியாக அங்கு சென்று காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விபத்து பற்றி மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணையை தொடங்கி உள்ளது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை மேற்கொண்டு முடிவு செய்யும்.
Related posts:
வட கொரிய அணு ஆயுத மையம் அழிப்பு!
ஐ.நா. பொதுச்செயலாளராக மீண்டும் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவு!
பதற்றங்களுக்கு மத்தியில் சீனா - அமெரிக்கா இடையே உயர்நிலை சந்திப்பு!
|
|