கலிபோர்னியா காட்டுத்தீ : பலி எண்ணிக்கை 66 ஆக அதிகிப்பு!
Friday, November 16th, 2018
கலிபோர்னியா மாநிலத்தில் பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் 3 இடங்களில் பரவி வருகிற காட்டுத்தீ தீவிரமடைந்துள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தெற்கு மற்றும் வடக்கு முனைகளில் இருந்து ஆயிரக்கணக்கான தீயணைப்பு படை வீரர்கள் போராடி வருகிறார்கள்.
1 லட்சத்து 25 ஏக்கர் நிலப்பரப்பில் பரவி உள்ள காட்டுத்தீயில் 30 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க காட்டுத்தீ வரலாற்றில் மிக மோசமான காட்டுத்தீ இதுதான் என்றும் கூறப்படுகிறது.
தீயணைப்பு பணியில் முழு மூச்சுடன் போராடி வருகிற வீரர்களுக்கு ஜனாதிபதி டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Related posts:
பெர்லின் தேர்தல் தோல்விக்கு ஏங்ககெலா மெர்கல் பொறுப்பேற்றார்!
ஸ்பெயின் விவகாரம் தொடர்பாக ஜேர்மன் கருத்து!
போர் நிறுத்தத்தை நீட்டிக்க தயார் - ஆப்கானிஸ்தான் அதிபர்!
|
|
|


