கர்நாடகா அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பு!

Wednesday, September 28th, 2016

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு மேலும் 2 நாட்களுக்கு வினாடிக்கு 6,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு குறித்து ஆராய்ந்து முடிவு எடுப்பதற்காக கர்நாடகத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூடியது.கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை தொடங்கியது. பா.ஜ.க., மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த் கூட்டத்தை தொடர்ந்து கர்நாடக மந்திரி சபை கூட்டமும் சித்தராமையா தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடலாமா? அல்லது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாமா? என விவாதிக்கப்பட இருக்கிறது.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.டெல்லியில் நாளை நடைபெறும் கூட்டத்திற்கு பிறகே காவிரி தண்ணீர் திறந்து விடுவது குறித்து முடிவெடுப்பது என தீர்மானிக்கபட்டது

201608271428367984_Cauvery-water-issue-22-Agricultural-systems-consultancy-in_SECVPF

Related posts: