கன மழை – வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 123 ஆக அதிகரிப்பு!

பீகார் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் அங்கு வசித்த பல்லாயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பீகாரில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது என மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளத்தில் சிக்கிய மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மீட்டு வருகின்றனர்.
Related posts:
அமெரிக்காவுக்கு இடம் ஒதுக்கீடு: சீனாவிலுள்ள தென் கொரியாவின் பிரபல நிறுவனத்தில் சோதனை!
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்!
தாக்குதலின் தீவிரத்தை குறைத்த ரஷியா - எச்சரிக்கை ஒலி நிறுத்தம் என உக்ரைன் ராணுவம் தகவல்!
|
|