கடும் மழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
Tuesday, July 31st, 2018
உத்தரப்பிரதேசத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்த கடும் மழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.
மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பெய்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நேற்று மட்டும் சஹரான்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பெய்த கடும் மழையில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.
வீடுகளை இழந்தவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து வருவதாக பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
சென்னையை வெள்ளம் மீண்டும் தாக்கும்! வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!
விண்ணில் பாய்ந்தது புவியை கண்காணிக்கும் ரிசோர்ஸ் சாட்-2ஏ!
ஈஸ்டர் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
|
|
|


