ஓ.பன்னீர்செல்வத்தின் வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!
Wednesday, February 8th, 2017
தேனி மாவட்டத்திலுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீடுகளுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அவர் சசிகலா தரப்புக்கு எதிராக நேற்று (செவ்வாய்கிழமை) செவ்வியை தொடர்ந்து பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அவரின் இரண்டு வீடுகளுக்கும் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் காவலுக்கு போடப்பட்டுள்ளனர்.அ.தி.மு.க பொருளாளர் பதவியில் இருந்து என்னை நீக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அ.தி.மு.க கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவார் என அக்கட்சியின் பொது செயலாளர் சசிகலா அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
ஜி20 மாநாட்டில் உலக பொருளாதாரத்தை பலப்படுத்த தலைவர்கள் உறுதி!
துப்பாக்கி சூட்டு - சிறுவர் உட்பட பலர் வைத்தியசாலையில் அனுமதி - கனடாவில் பதற்றம்!
மீண்டும் கொரோனா தொற்று - அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான முழுமையாக மெல்பேன் முடக்கம்!
|
|
|


