ஓகஸ்ட் 28 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை நீடிப்பதால் ஆகஸ்ட் 28 ஆம் திகதி வரை கேரளாவில் பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவக்கப்படுகிறது.
குறித்த இந்த நாட்களில் நடைபெறுவதாக இருந்த அனைத்து தேர்வுகளும் இரத்து செய்யப்படுவதாகவும், தேர்வுகளுக்கான மறுதிகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Related posts:
சிங்கப்பூரில் ஸிக்கா வைரஸினால் இருவர் பாதிப்பு!
நூற்றுக்கணக்கான திமிங்கிலங்கள் திடீரென கரையொதுங்கியது!
இலங்கை வீரருக்கு வெண்கலப் பதக்கம்!
|
|