ஒரு மில்லியன் டொலர் பிணைத் தொகை பெற்று நோர்வே பிணைக்கைதியை விடுவித்த போராளிகள்!

பிலிப்பைன்ஸில் உள்ள போராளிகள் பிணை தொகையை பெற்றுக்கொண்டபின்னர் நோர்வே பிணக்கைதி ஒருவரை விடுவித்துள்ளனர்.
ஒரு வருடத்திற்குமுன், உல்லாச விடுதியிலிருந்து ஜார்டன் செக்கிங்ஸ்டாட் மற்றும்மூவரை அபு சயாஃப் என்ற தீவிரவாத குழு கடத்தியது. கடத்தப்பட்டவர்களில் பிலிப்பைன்ஸ் பெண் ஒருவரும் அடங்குவார். அவர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இரு கனடா நாட்டை சேர்ந்த பிணயக்கைதிகள் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
பிலிப்பைன்ஸிடம் இருந்து சுதந்திரம் வேண்டி அபு சையஃப் என்ற இஸ்லாமியவாத குழு சண்டையிட்டு வருகிறது.
பிணைத்தொகைக்காக ஆட்களை கடத்தி அந்த குழு பணம் ஈட்டி வருகிறது. செக்கிங்ஸ்டாட் விடுதலைக்கு சுமார் ஒரு மில்லியன் டாலர் வரை அபு சையாஃப்புக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது
Related posts:
முத்துகுமாரின் சகோதரரின் வேண்டுகோள்!!
எறியப்படும் முகக்கவசங்களால் அதிக ஆபத்து – மக்களை எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள் !
இந்தியாவின் விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளது - விஞ்ஞானிகள் தகவல்!
|
|