ஒருவருக்கு 5 கிலோ இலவச அரிசி!

ஒருவர் மட்டுமே உள்ள குடும்பத்திற்கு மாதம் 12 கிலோ அரிசியும், 2 பேர் மட்டுமே உள்ள குடும்பத்திற்கு மாதம் 16 கிலோ அரிசியும் தற்போது உள்ளது போலவே தொடர்ந்து வழங்கப்படும்.
5 நபர்கள் உள்ள குடும்பத்திற்கு இனி 20 கிலோவுக்கு பதிலாக மாதம் 25 கிலோ அரிசியும், 7 நபர்கள் உள்ள குடும்பத்திற்கு 25 கிலோ அரிசியும், 10 பேர் உள்ள குடும்பத்திற்கு மாதம் 50 கிலோ அரிசியும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த சட்டத்தை செயல்படுத்துவதால் அரசுக்கு ஆண்டுக்கு 1,193.30 கோடி கூடுதல் செலவாகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய அரசு, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தினை தமிழகத்தில் உடனடியாக அமுல்படுத்துமாறும், அவ்வாறு அமுல்படுத்த தவறினால் தற்போது வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கென வழங்கப்படும் அரிசியின் விலையினை கிலோ ஒன்றுக்கு ரூ.8.30 என்பதிற்கு பதிலாக ரூ.22.54 என்ற விலையில் மட்டுமே வழங்க இயலும் என்று தெரிவித்துள்ளது.
Related posts:
|
|