ஐ.எஸ் இயக்கத்திற்கு நிதி மற்றும் ஆட்களைத் திரட்டிய நபர் கைது!

Wednesday, July 5th, 2017

ஐ.எஸ் இயக்கத்திற்கு நிதி மற்றும் ஆட்களைத் திரட்டியதாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் இன்று காலை ராஜஸ்தான் மாநில காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தை சேரந்த இவர், சென்னை முத்தையால் பேட்டையில் வசித்து வந்துள்ளார். கையடக்க தொலைபேசி பழுது பார்க்கும் நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ள அவர், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு இந்தியாவில் நிதி மற்றும் ஆட்களை திரட்டியதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கடந்த ஆண்டு ராஜஸ்தானில் கைதுசெய்யப்பட்ட ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழகத்தில் ஐ.எஸ் ஆதரவு தரப்பினர் சிலர் செயற்பட்டுவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: