ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேற்றம்: ஜேர்மனி பிரான்ஸ் உள்ளிட்ட நாட்டுக்கு அதிஸ்டம்!
Friday, January 20th, 2017
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறி முடிவெடுத்த நாளில் இருந்து பல்வேறு மாற்றங்கள் ஏற்பட தொடங்கிவிட்டது.
அதன் ஒரு பகுதியாக இலண்டன் நகரில் உள்ள அமெரிக்காவின் Goldman Sachs வங்கியின் ஊழியர்கள் 1000 பேர் ஜேர்மனியின் மிகப்பெரிய நகரான Frankfurt கிளை வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.முக்கிய மேலாதிகாரிகளும் இந்த 1000 பேரில் அடக்கமாகும்.
இந்த வங்கி ஊழியர்கள் முக்கியமாக Frankfurt நகரின் வங்கிக்கு மாற்றப்பட காரணம் அங்கு தான் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமை அலுவலகம் உள்ளது.
மேலும் இலண்டனிலிருந்து ஊழியர்கள் நியூயார்க், பிரான்ஸ், ஸ்பெயின், போலாந்து போன்ற நகருக்கும் மாற்றப்பட்டு வருகிறார்கள்.
இதனிடையில் பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மே தனது நாடு ஐரோப்பிய பொது சந்தையை விட்டு விலகும் என அறிவித்துள்ளதால், HSBC வங்கியும் தனது இலண்டன் ஊழியர்கள் 1000 பேரை பாரிஸ் நகரருக்கு மாற்றியுள்ளது.ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகியுள்ளது இந்த வங்கிகள் விடயங்களில் ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு பல நன்மைகள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related posts:
|
|
|


