ஐரோப்பாவை பந்தாடும் சூறாவளி – 6 பேர் மரணம்!
Tuesday, October 31st, 2017
மத்திய மற்றும் வட ஐரோப்பாவை தாக்கிய பாரிய சூறாவளி காரணமாக குறைந்தது 6 பேர் பலியாகியுள்ளனர் என செய்திள் வெளியாகியுள்ளன.
பலியானவர்கள் ஜெர்மனி போலந்து மற்றும் செக் குடியரசு நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுசெக் குடியரசின் அதி உயர் மலைப்பிரதேசத்தில் இந்த சூறாவளியின் வேகம் மணிக்கு 112 மைல் வேகத்தில் வீசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சூறாவளி காரணமாக போலந்து மற்றும் செக்குடியரசு நாடுகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புக்கள் மின்சார விநியோகம் இன்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜேமன் தொடரூந்து தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளமையால் தொடரூந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.போலந்தில் பாரிய விருச்சங்கள் வீழ்ந்த நிலையில் பல நெடுஞ்சாலை போக்குவரத்து சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Related posts:
180 கிமீ வேகத்தில் தைவானை நெருங்கும் காற்று!
எந்நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் -வடகொரியா !
நாட்டின் இருப்பிற்கு ஆபத்து ஏற்பட்டால் அணுவாயுதங்களை பயன்படுத்துவோம் – ரஸ்யா அதிரடி அறிவிப்பு!
|
|
|


